தமிழக அரசு பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது (அறிவிப்பு எண்: Advertisement No.695 Notification No.13/2024) அந்த அறிவிப்பில் குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
மாதம் ரூ 5,000 வரை உதவித் தொகை || பயிற்சியுடன் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!
அரசு உதவி வழக்கு நடத்துநர் (Assistant Public Prosecutor, Grade-II)
காலியிடங்களின் எண்ணிக்கை: 51
- கல்வித் தகுதி: இப்பணிக்கு கல்வித் தகுதியாக B.L., Degree படித்திருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2024 அன்று 36 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
- சம்பளம்: நிலை 22 என்ற விதிப்படி சம்பளம் வழங்கப்படும்
தேர்வு முறை:
அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
- தேர்வுக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று 12.10.2024 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes