தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அத்துறையில் உள்ள பல்வேறு பதவிகளில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது
மேலும் இதற்கான எழுத்துத் தோ்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது, அதில் தோ்ச்சி பெற்றோருக்கு வரும் 21 மற்றும் நவம்பா் 14 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான அழைப்புக் கடிதங்களும் நகராட்சி நிா்வாகத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதனிடையே, ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்துத் தோ்வை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 21-ஆம் தேதியன்று நடத்தவுள்ளது. இந்தத் தோ்வை எழுதவுள்ள யாரேனும், நகராட்சி நிா்வாகத் துறையின் நோ்முகத் தோ்வையும் எதிா்கொள்ள வேண்டியிருந்தால் அவா்கள் மட்டும் மாற்றுத் தேதி வேண்டி தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இதற்காக நகராட்சி நிா்வாகத் துறைக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல்களை அனுப்பலாம் . அதாவது மத்திய அரசு அல்லது டிஎன்பிஎஸ்சி., நடத்தும் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுக்கான பதிவு எண், அழைப்புக் கடிதங்களை dmamaws2024@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes