அரசு பணிபெற வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் கனவாக உள்ளது, அரசு வேலைவாய்ப்பு என்று எண்ணி போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். அரசுப் பணி என்றால் எவ்வித கஷ்டமும் இல்லை, மாதம் 1 ஆம் தேதியே சம்பளம் என்ற சிறப்பம்சங்கள் உள்ளது ஆதலால் அரசு பணிக்கு தயாராக வேண்டும் என்று பல இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் கல்வித் துறையில் காலியாக உள்ள 4,000 விரைவில் நிரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்து உள்ளார் அதனை பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.
உங்கள் சொந்த ஊரில் தேர்வு இல்லாத தமிழக அரசு வேலை வாய்ப்பு || விண்ணப்பிக்கும் முறை..!
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
விரைவில் நிரப்பப்படும் :
தமிழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன், துறையின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்லூரிகளில் பணிகள் தடைப்படாமல் இருக்கும் வகையில், தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, நிரந்தரமாக உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். அரசு கலை மற்றும் கல்லூரிகளில் காலியாகவுள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes