தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகள் அயல்பணி (அவுட்சோர்சிங்) முறையில் ‘கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் ‘(டி.இ.ஓ.,) மற்றும் ‘ஸ்டில் கேமரா ஆப்பரேட்டர்கள்’ (எஸ்.சி.ஓ.,) பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது அதனை பற்றி பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் ‘(டி.இ.ஓ.,) மற்றும் ‘ஸ்டில் கேமரா ஆப்பரேட்டர்கள் பணிகளுக்கு அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது பொது வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களை பாதிக்கும்.இந்நிலையில், பத்திரப்பதிவு துறையில் அவுட்சோர்ஸிங் முறை குறித்து, மதுரை முகமது மஜீத் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
இந்திய அஞ்சல் துறை வங்கியில் வேலை வாய்ப்பு || தமிழகத்தில் வேலை, விண்ணப்பிக்க மறக்காதீர்கள்..!
அந்த மனுவில் அரசுப் பணியில் நியமனங்கள் மேற்கொள்ள டி.என்.பி.எஸ்.சி., மூலமாக தேர்வு நடத்துகிறது. அதனிடம் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்யாதது சட்டப்படி ஏற்புடையதல்ல. மேலும் தமிழகத்தில் பதிவாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
அரசு விதிகள்படி டி.என்.பி.எஸ்.சி., மூலம் ‘டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்’, ‘கேமரா ஆப்பரேட்டர்கள்’ மற்றும் பிற பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப வேண்டும். அதைத் தவிர்த்து வேறு வகையில் பதிவுத்துறையில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் அமர்வு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதிவுத்துறை தலைவர் அக்டோபர் 29ல், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes