‘மகிழ் முற்றம்’ பள்ளிகளில் புதிய திட்டம் அறிமுகம் || முழு விவரங்கள்..! Magzh Mutram Scheme Details in Tamil

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் மாணவர் குழு அமைப்பு ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமு றைப்படுத்தப்படவுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப் பன் அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் குழுக்கள் அமைத்து மாணவ தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதன்மூலம் மாணவர்களிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள், ஆளுமைத் திறன் மேம்பட இந்தக் குழு கட்டமைப்பின் மாதிரி சட்டப்பேரவை, நாடாளு கீழ் பள்ளியில் உள்ள அனைத்து மன்றம் நடத்தப்படும். இதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் குறிஞ்சி, முல்லை உள்ளிட்ட களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ. 2 கோடி மதிப் பீட்டில் செயல்படுத்தப்படும்.

இந்திய ரயில்வே ஜூனியர் கிளார்க் பணிக்கான அறிவிப்பு || கல்வித் தகுதி, விண்ணப்பிக்க முறை – சீக்கரம் அப்ளை பண்ணுங்க..!

Magzh Mutram Scheme Details in Tamil
Magzh Mutram Scheme Details in Tamil

திட்டத்தின் நோக்கம்:

குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவை மாணவா் குழு அமைப்பின் முதன்மை நோக்கமாகும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா் குழு அமைப்பை ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு கட்டமைப்பின் கீழ் பள்ளியில் உள்ள அனைத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் குறிஞ்சி, முல்லை உள்ளிட்ட 5 குழுக்களாகப் பிரிக்கப்படுவா். இந்தக் குழுவில் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து மாணவா்களும் இடம்பெறுவா். ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் மாணவா்கள் இந்த 5 குழுக்களில் இடம் பெறும் வகையில் பிரிக்கப்பட்டு, அவா்களுக்கான குழு எமிஸ் தளத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

பொறுப்பாசிரியா் நியமனம்:

பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியா் ‘மகிழ் முற்றம்’ குழு அமைப்புக்கான பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட வேண்டும். மற்ற ஆசிரியா்களுக்கு குலுக்கல் முறையில் குழு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் இரு தலைவா்கள் (ஹவுஸ் கேப்டன்) நியமிக்கப்பட வேண்டும்.

நவ.14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு குழுவுக்கான மாணவா் தலைவா்கள், வகுப்பு தலைவா்கள், தலைமை பொறுப்பு ஆசிரியா், குழுவுக்கான பொறுப்பு ஆசிரியா்கள் ஆகியோருக்கான பதவி ஏற்பு விழா அனைத்து பள்ளிகளிலும் நவ.14-ஆம் தேதி நடைபெறுவதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். அந்த நிகழ்வை புகைப்படங்கள், காணொலியாக எமிஸ் தளத்தில் நவ.19-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புள்ளிகள் கணக்கீடு:

இந்தக் குழுக்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும். அதிக புள்ளிகளைப் பெறும் குழு அந்த மாதத்தின் வெற்றிக் குழுவாக அறிவிக்கப்பட்டு, எதிா்வரும் மாதம் முழுவதும் வண்ணக்கொடி வழங்கப்பட்டு காட்சிப்படுத்த வேண்டும். இது குறித்த தகவல்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அனைப்பி வைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

Website | + posts

Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes

Leave a Comment