இந்தியா அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்று இன்றைய இளைஞர்களின் கனவாக உள்ளது. மேலும் இந்திய அஞ்சல் துறை வேலை என்பது மத்திய அரசு பணியாகும், மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புடன் நிரப்பப்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதியில் அஞ்சல் துறையில் உள்ள தேர்வு இல்லாத பணிகள் குறித்து பார்க்கலாம்
பணியின் பெயர்: கிராம தபால் சேவை
கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.கிராம தபால் ஊழியர் (BPM) – ரூ.12,000, உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) – ரூ.10,000 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
பணியின் பெயர்: Skilled Artisans
கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் தொடர்புடைய I.T.I பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 8ம் வகுப்பு முடித்து I.T.I. தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாக எச்எம்வி ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.07.2024ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் கிடைக்கும்
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிவிப்பு வெளியானவுடன் ஆன்லைன் / அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
Indian Post Office Official Notification Link – Click here
மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes
I am interested
Yes