ரேஷன் கார்டு உள்ளதா… தீபாவளிக்கு வரும் ஸ்பெஷல் பொருட்கள் || காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி முழு விவரங்களுடன் இதோ!!! Happy News for TN Ration Card Holders for Ration Food Supply

தமிழகத்தில் பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில், ரேஷன் கடைகளில்  வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் தட்டுப்பாடின்றி இருந்துவருகின்றன. அதனால்தான், ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணியும் அறிவித்தவிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் ரேஷன் கடைகளில், 6000 கடைகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது, வருடத்துக்கு பத்தாயிரம் கடைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் எந்த நியாய விலை கடையில் வேண்டுமானாலும், ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை பெற்று கொள்ளலாம். அதற்கேற்றவாறு, நியாய விலைக் கடைகளில் பொருட்கள் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில நியாய விலைக் கடைகளில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்கள் பொருட்களை வாங்கி  செல்லும்போது தடங்கல் இருப்பதாக கூறப்பட்டது. அதையும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை || முழு விவரங்களுடன்..!

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

Happy News for TN Ration Card Holders for Ration Food Supply
Happy News for TN Ration Card Holders for Ration Food Supply

தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்

மேலும் 17,100 மெட்ரிக் டன் கோதுமையை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேர்ந்துவிடும், அதன்படியே, கோதுமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடுகள் இல்லாதவாறு ரேஷன் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுபோக பருவமழை துவங்கிவிட்டதால், இதை கருத்தில்கொண்டும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலுமி புதிய ரேஷன் கார்டு குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கிறது. புதிய அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற உணவு பொருட்கள் வழங்கல் துறையின் இணையதள பக்கத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்றும், புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற காலத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் குடும்ப தலைவர், உறவினர்கள், இருப்பிட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website | + posts

Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes

Leave a Comment