மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது (அறிவிப்பு எண் GEXCOM/II/(3)/43/2020-ESTT). அந்த அறிவிப்பில் மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறையில் உள்ள Assistant Halwai-cum-Cook, Clerk, Canteen Attendant பணிகளை நிரப்ப அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிடங்களுக்கு 10th , 12th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பகுதியில் மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறை Assistant Halwai-cum-Cook, Clerk, Canteen Attendant பணிக்காண கல்வித் தகுதி, சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பார்க்கலாம்.
10,000 காலிப் பணியிடங்கள் || SBI வங்கி வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு..!
Assistant Halwai-cum-Cook
மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறை Assistant Halwai-cum-Cook பணிக்கு 1 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ கேட்டரிங் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் ஒரு ஆண்டு சமையல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ. 19,900 – ரூ. 63,200 வரை வழங்கப்படும், வயது 18 – 25 க்குள் இருக்க வேண்டும், வயது தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Clerk
மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறை Clerk பணிக்கு 1 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக 12th commerce பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சு ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்ச்சி அடைந்து இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ. 19,900 – ரூ. 63,200 வரை வழங்கப்படும், வயது 18 – 25 க்குள் இருக்க வேண்டும், வயது தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Canteen Attendant
மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறை Canteen Attendant பணிக்கு 12 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதியாக 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ. 19,900 – ரூ. 63,200 வரை வழங்கப்படும், வயது 18 – 25 க்குள் இருக்க வேண்டும், வயது தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை
மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறை பணிகளுக்கு எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு அடிப்படையில் தேர்ச்சியானவர்களுக்கு பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
மத்திய வரி மற்றும் மத்திய கலால் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து,பிரிண்ட் எடுத்து அந்த படிவத்தில் தங்களுக்கு தகுந்த பணியை தேர்வு செய்து, எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக Office of the Principal Commissioner of Central Tax & Central Excise, Central Revenue Building, I.S Press Road, Kochi-682018, Kerala, என்ற முகவரிக்கு 25.10.2024 – க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் (PDF)
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes