இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வங்கி சேவைகளை விரிவுபடுத்த நடப்பு நிதியாண்டில் சுமார் 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டு வருகிறது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தொடர் வாடிக்கையாளர் சேவையை வழங்குவும், தனது டிஜிட்டல் சேனல்களின் பயன்பாட்டை அதிகரிக்க முதலீடு செய்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 2024-ஆம் நிலவரப்படி வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,32,296-ஆக உள்ளது. இதில், கடந்த நிதியாண்டின் இறுதியில் 1,10,116 அதிகாரிகள் வங்கியின் பட்டியலில் இருந்தனர். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை இதை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.
“எஸ்பிஐ வங்கியின் சேர்மேன் சி.எஸ் செட்டி அவர்கள், தொழில்நுட்பத் துறையிலும், பொது வங்கி துறையிலும் எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். தற்போது சுமார் 1500 புதிய பணியாளர்களை சேர்க்க உள்ளதாக சமீபத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளோம்”
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தற்போது மாறி வரும் சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, டிஜிட்டல் மயம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. SBI வங்கி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சிறந்த வங்கி அனுபவத்தை பெற வேண்டும். எனவே, நாங்கள் அனைத்து நிலைகளிலும் எங்கள் ஊழியர்களை தொடர்ந்து மறு தேர்வு செய்கிறோம்.
நெட்வொர்க் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, SBI பேங்க் நடப்பாண்டில் நாடு முழுவதிலும் சுமார் 600 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி SBI நாடு முழுவதும் 22,542 கிளைகளைக் கொண்டுள்ளது. பல நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்திருக்கும் நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பை தேடி கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
Hi, I am Karthi working as a professor and content writer. I am guiding the students for their career growth and publishing articles on Latest Govt Jobs, Career News & Govt Schemes
Iam okay tha work SBI bank and ICAR
nice mam
Hi mam .. epdi mam apply pantrathu
Please wait for the notification mam